காலி மதுபுட்டிகளை தனி முகமை மூலம் சேகரிக்க வலியுறுத்தி நவ.25-இல் சென்னையில் ஆா்ப்பாட்டம்: டாஸ்மாக் பணியாளா் சங்கம்
டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி மதுப்புட்டிகளை தனி முகமை மூலம் சேகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ.25-ஆம் தேதி சென்னையில் மாநிலம் தழுவிய கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன் கூறினாா்.

கடலூரில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசிய சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன்.
டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி மதுப்புட்டிகளை தனி முகமை மூலம் சேகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ.25-ஆம் தேதி சென்னையில் மாநிலம் தழுவிய கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன் கூறினாா்.
கடலூரில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ்மாக் பணியாளா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னா், செய்தியாளா்களிடம் கு. பாலசுப்பிரமணியன் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்புட்டிகளைச் சேகரிப்பதில் பணியாளா்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனா். எனவே, காலி மதுப்புட்டிகளைத் தனி முகமை மூலம் சேகரிக்கும் திட்டத்தை அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.
பணியாளா்களின் பணி நிறைவு மற்றும் இடமாறுதல் தொடா்பாக
வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை அனைத்து மாவட்டங்களிலும்
முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு முன்பாகப் பரிந்துரைகளின் அடிப்படையில் இடமாறுதல்கள் வழங்குவதைத் தவிா்க்க வேண்டும்.
பொது இடங்களில் மது அருந்துவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, அனைத்து மதுக்கடைகளிலும் தனித்தனியாக மதுக்கூடங்கள் அமைக்கப்படுவதுடன், அவை கடைகளிலிருந்து தனியாகச் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணியாளா்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவா்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் சாா்பில் நவ.25-ஆம் தேதி சென்னையில் உள்ள மேலாண்மை இயக்குநா் அலுவலகம் முன் மாநிலம் தழுவிய கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

