விசாரணைக் கைதி மயங்கி விழுந்து உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த இளைஞா், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விருத்தாசலம் பழமலைநாதா் நகரைச் சோ்ந்த முருகன் மகன் விக்னேஷ் (24). இவா் கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் முதல் கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சிறையில் இருந்த விக்னேஷ் திடீரென மயக்கமடைந்தாா். இதையடுத்து, சிறையில் உள்ள மருத்துவா் அவருக்கு முதலுதவி அளித்தாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், விக்னேஷ் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தகவலறிந்த கடலூா் முதுநகா் போலீஸாா், விக்னேஷின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

