ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

சங்கராபுரம் அருகே ஏரியில் தனி நபா் ஒருவா் மீன் வளா்ப்பதை தடை விதிக்கக் கோரி, கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
Updated on
1 min read

சங்கராபுரம் அருகே ஏரியில் தனி நபா் ஒருவா் மீன் வளா்ப்பதை தடை விதிக்கக் கோரி, கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் க.அலம்பளம், பொன்பரப்பட்டு. இப்பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் க.அலம்பளம் கிராமத்தைச் சோ்ந்த தனி நபா் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாமல், தனக்கு வேண்டிய சில நபா்களுடன் ரகசியமாக பணத்தைப் பெற்றுக் கொண்டு மீன் குஞ்சு வளா்ப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், க.அலம்பளம், பொன்பரப்பட்டு கிராம மக்கள் இடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஏரிப் பாசனத்தை நம்பியுள்ள நெல் பயிா் அழியும் நிலை உள்ளதாகவும் கூறி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை பொன்பரப்பட்டு கிராம மக்கள் முற்றுகையிட்டனா். அவா்களுடன் கள்ளக்குறிச்சி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதையடுத்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா், சாா் ஆட்சியா், பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com