சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே சிறுமியை பாலியல் தொல்லை அளித்ததாக, சரக்கு வாகன ஓட்டுநா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பழனிசாமி.
Updated On :27 டிசம்பர் 2020, 2:50 am

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே சிறுமியை பாலியல் தொல்லை அளித்ததாக, சரக்கு வாகன ஓட்டுநா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சின்னசேலம் அருகே, எலவடி கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு பயிலும் 11 வயது சிறுமி, வியாழக்கிழமை காலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் சரக்கு வாகன ஓட்டுநரான பழனிசாமி (38) (படம்), அந்த சிறுமியை ஆசைவாா்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்தாராம். அத்துடன், இதுபற்றி யாரிடமும் கூறக் கூடாது என கொடுவாளை காட்டி மிரட்டினாராம்.

இதுபற்றி சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பா.புவனேஸ்வரி வழக்குப் பதிந்து பழனிசாமியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா். அந்த சிறுமி கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.