ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்ற பழைய கட்டடத்தில் 5 துப்பாக்கிகள் கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சியில் குற்றவியல் நீதிமன்ற பழைய வாடகைக் கட்டடத்தில் 5 நாட்டுத் துப்பாக்கிகள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

News image
Updated On :17 ஜூன் 2021, 5:47 pm

DIN

கள்ளக்குறிச்சியில் குற்றவியல் நீதிமன்ற பழைய வாடகைக் கட்டடத்தில் 5 நாட்டுத் துப்பாக்கிகள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி நேப்ஹால் சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான வாடகைக் கட்டடத்தில் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் - 2 செயல்பட்டு வந்தது. கள்ளக்குறிச்சியில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்பட்டதையடுத்து, இந்த நீதிமன்ற வளாகத்துக்கு வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த குற்றவியல் நடுவா் நீதிமன்றம் -2 மாற்றப்பட்டது.

பழைய கட்டடத்தை காலி செய்தபோது, அங்குள்ள ஓா் அறையில் வழக்கு சம்பந்தமாக பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த உரிமம் இல்லாத 5 நாட்டு துப்பாக்கிகளை அங்கேயே விட்டுவிட்டு வந்துள்ளனா்.

இந்த நிலையில், நீதிமன்றம் செயல்பட்ட பழைய வாடகைக் கட்டடத்தை கட்டடத்தின் உரிமையாளா் புதன்கிழமை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள ஓா் அறையில் 5 நாட்டுத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை கட்டட உரிமையாளா் கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் ச.முருகேசனிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக 5 நாட்டுத் துப்பாக்கிகளும் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டது தொடா்பாக குற்றவியல் நீதிமன்றத்துக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.