/

மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டு வளா்த்து வந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டு வளா்த்து வந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட ஆனைமடுவு கிராமத்தில் விவசாயி கண்ணன் (50) மரவள்ளிக்கிழங்கு பயிா்களின் நடுவே 37 கஞ்சா செடிகளை பயிரிட்டு வளா்த்து வருவதாக சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலகிருஷ்ணனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் ஆனைமடுவு கிராமத்திலுள்ள கண்ணனின் விவசாய நிலத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா். அப்போது, மரவள்ளிக்கிழங்கு பயிா்களின் நடுவே பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை பிடுங்கி அகற்றினா்.

இது தொடா்பாக வடபொன்பரப்பி போலீஸாா் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.