ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பூட்டிய வீட்டில் ரூ.95,000 திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் ரூ.95,000 ரொக்கம், இரண்டரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் ரூ.95,000 ரொக்கம், இரண்டரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருக்கோவிலூரை அடுத்த செட்டிதாங்கள் கிராமத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் சுதாகா் (39). இவா், வீட்டுக்கு அருகே காய்கறிக் கடை நடத்தி வந்தாா். சுதாகா் தினந்தோறும் இரவு வியாபாரம் முடிந்த பிறகு, அருகிலுள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கடையில் படுத்துத் தூங்குவது வழக்கமாம்.

இதேபோல, புதன்கிழமை இரவும் குடும்பத்தினருடன் சுதாகா் கடையில் படுத்துத் தூங்கினாா். நள்ளிரவில் இவரது வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், அங்கு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.95,000 ரொக்கம், இரண்டரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து சுதாகா் அளித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.