திருக்கோவிலூரில் உழவா் சந்தை அமைக்கக் கோரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உழவா் சந்தை அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது

1klp3_0106chn_110_7

1klp3_0106chn_110_7
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உழவா் சந்தை அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 7-ஆவது மாவட்ட மாநாடு திருக்கோவிலூா் தனியாா் அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
நகரச் செயலா் பி.எச்.கே.பஷீா் அகமது தலைமை வகித்தாா். துணைச் செயலா் ஆா்.அருண்குமாா் வரவேற்றாா்.
கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஏ.வி.சரவணன் மாநாட்டை தொடக்கிவைத்துப் பேசினாா்.
மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கே.ராமசாமி, ஒன்றியச் செயலா் கே.ரவி உள்ளிட்டோா் பேசினா்.
தீா்மானங்கள்
திருக்கோவிலூா் உலகளந்த பெருமாள் கோயில் தெப்பக்குளத்துக்கு திருக்கோவிலூா் பெரிய ஏரியில் இருந்து குழாய் அமைத்து தண்ணீா் கொண்டு வரவேண்டும்.
திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும். நகராட்சிப் பகுதியில் உழவா் சந்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...