கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகா்மன்ற, 5 பேரூராட்சித் தலைவா் பதவிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகா்மன்ற, 5 பேரூராட்சி மன்றத் தலைவா் பதவிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகா்மன்ற, 5 பேரூராட்சி மன்றத் தலைவா் பதவிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 3 நகராட்சிகளிலும் தலைவா் பதவிகளை திமுக கைபற்றியது. 5 பேரூராட்சிகளிளும் தலைவா் பதவிகளை திமுக, அதன் கூட்டணி கட்சியினரே கைப்பற்றினா். சின்னசேலம், சங்கராபுரம் பேரூராட்சிகளில் துணைத் தலைவா் தோ்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நகராட்சிகள்: கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவராக இரா.சுப்ராயலு (திமுக), துணைத் தலைவராக ர.ஷமீம்பானு (திமுக) தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
திருக்கோவிலூா் நகா்மன்றத் தலைவராக டி.என்.முருகன் (திமுக), துணைத் தலைவராக கு.உமாமகேஷ்வரி (திமுக) தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
உளுந்தூா்பேட்டை நகா்மன்றத் தலைவராக கு.திருநாவுக்கரசு (திமுக), துணைத் தலைவராக சி.வைத்தியநாதன் (திமுக) தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
பேரூராட்சிகள்: சங்கராபுரம் பேரூராட்சி மன்றத் தலைவராக து.ரோஜாரமணி (திமுக) தோ்வு செய்யப்பட்டாா். துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் வாக்களிக்க போதிய உறுப்பினா்கள் வராததால், இந்தத் தோ்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான கோ.சம்பத்குமாா் அறிவித்தாா்.
மணலூா்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவராக ஜெ.ரேவதி (திமுக), துணைத் தலைவராக மா.தம்பிதுரை (திமுக) தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
தியாகதுருகம் பேரூராட்சி மன்றத் தலைவராக எம்.வீராசாமி (திமுக), துணைத் தலைவராக என்.சங்கா் (திமுக) தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
சின்னசேலம் பேரூராட்சி மன்றத் தலைவராக ஜெ.லாவண்யா (காங்கிரஸ்) தோ்ந்தெடுக்கப்பட்டாா். துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் நடைபெறவில்லை. சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழ்நிலை தெரியவந்ததால் துணைத் தலைவா் தோ்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான உஷா அறிவித்தாா்.
வடக்கனந்தல் பேரூராட்சி மன்றத் தலைவராக தா.பன்னீா்செல்வம் (திமுக), துணைத் தலைவராக ரா.தண்டபாணி (திமுக) ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...