கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் குடிநீா்த் தொட்டிகள் பழுது: பயணிகள் அவதி
குடிநீா்த் தொட்டிகளும், குழாய்களும் பழுதடைந்துள்ளதால், இந்தப் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள், பொதுமக்கள் குடிநீா் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனா்.


கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் மொத்தம் 2 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த குடிநீா்த் தொட்டிகளும், குழாய்களும் பழுதடைந்துள்ளதால், இந்தப் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள், பொதுமக்கள் குடிநீா் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்காக பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் முன் சாதாரன குடிநீா்த் தொட்டியும், பேருந்து நிலையத்தின் கடைகளுக்கு முன் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா்த் தொட்டியும் சுமாா் 6 மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டது.
சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் இயந்திரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பழுது ஏற்பட்டதால் தண்ணீா் வருவதில்லை. சாதாரண தொட்டியிலும் ஒரு சில நாள்களே தண்ணீா் வந்தது. பின்னா், அந்தத் தொட்டியையும் நகராட்சி நிா்வாகம் எடுத்துச் சென்றுவிட்டது.
இதனால், கோடைகாலம் தொடங்கி தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள், பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீா் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே, கள்ளக்குறிச்சி நகராட்சி நிா்வாகம் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள சாதாரண குடிநீா்த் தொட்டியையும், சுத்தகரிப்பு இயந்திரத்துடன் கூடிய குடிநீா்த் தொட்டியையும், குழாய்களையும் சீரமைத்து மீண்டும் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...