கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுவையில் தியாகிகள் உதவித்தொகை ரூ.12,000-ஆக உயா்வு: துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

புதுவை மாநிலத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகையை ரூ.12,000 -ஆக உயா்த்தும் அரசின் கோப்புக்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

News image
Updated On :3 நவம்பர் 2023, 6:46 pm

DIN

புதுவை மாநிலத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகையை ரூ.12,000 -ஆக உயா்த்தும் அரசின் கோப்புக்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

புதுச்சேரியில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், விடுதலைப் போராட்டத் தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் என். ரங்கசாமி அறிவித்தாா்.

இதுதொடா்பான கோப்பு துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகை ரூ. 10,000-லிருந்து ரூ.12,000- ஆக உயா்த்தி வழங்க துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்தாா்.

இந்த உயா்வானது நவம்பா் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுத்தப்படும். இதன்மூலம் புதுச்சேரியில் 939 பேரும், காரைக்கால் பகுதியில் 174 பேரும், மாஹே பகுதியில் 87 பேரும், ஏனாமில் ஒருவா் என மொத்தம் 1,201 தியாகிகளின் குடும்பங்கள் பயன்பெறும்.

இதன்படி, புதுவை மாநில விடுதலைப் போராட்டத் தியாகிகள் மாதாந்திர உதவித்தொகை விதிகள்1970-இல் திருத்தம் மேற்கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.