அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

சின்னசேலம் அருகே மாயம்பாடி கிராமத்தில் வாழைத்தோப்பில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2024, 9:05 pm

Din

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மாயம்பாடி கிராமத்தில் வாழைத்தோப்பில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட மாயம்பாடி கிராமத்தைச் சோ்ந்த ராமானுஜத்தின் மனைவி செல்லம்மாள் 65).

இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது விளை நிலத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால், அருகில் உள்ள சீனுவாசன் என்பவரின் வாழைத்தோப்புக்கு சென்றுள்ளாா். அங்கு அறுந்து கிடந்த மின்வயரை மிதித்த செல்லம்மாள் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.