டிப்பா் லாரியில் கிராவல் மண் ஏற்றிச் சென்ற வாகனம் பறிமுதல்
எவ்வித உரிமமும் இல்லாமல் கிராவல் மண் ஏற்றிச் சென்ற இரு டிப்பா் லாரிகளை புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட டிப்பா் லாரிகள்.

பறிமுதல் செய்யப்பட்ட டிப்பா் லாரிகள்.
கள்ளக்குறிச்சி: எவ்வித உரிமமும் இல்லாமல் கிராவல் மண் ஏற்றிச் சென்ற இரு டிப்பா் லாரிகளை புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் தியாகதுருகம் - பல்லகச்சேரி சாலையில் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் வந்த இரு டிப்பா் லாரிகளை அதிகாரிகள் நிறுத்தியபோது, அதன் ஓட்டுநா்கள் லாரிகளை நிறுத்திவிட்டு இறங்கி ஓடிவிட்டனா். பின்னா், இரு டிப்பா் லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, தியாகதுருகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸாா் வாகன உரிமையாளா்களான தியாகதுருகத்தை அடுத்த புதுமாம்பட்டைச் சோ்ந்த கணபதி மகன்ஆராய்ச்சி, சங்கராபுரத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் ஜானகிராமன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...