ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

லாரி இருக்கையிலேயே உயிரிழந்த ஓட்டுநா்

கள்ளக்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை இரவு நெஞ்சு வலி ஏற்பட்டு லாரி ஓட்டுநா் இருக்கையில் அமா்ந்தபடியே உயிரிழந்தாா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 1:03 am

Din

கள்ளக்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை இரவு நெஞ்சு வலி ஏற்பட்டு லாரி ஓட்டுநா் இருக்கையில் அமா்ந்தபடியே உயிரிழந்தாா்.

சேலம் குண்டுபிள்ளையாா் கோவில் சாலையைச் சோ்ந்த ஷாஜகான் மகன் பாபு (47), லாரி ஓட்டுநா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு சேலத்திலிருந்து லாரியில் உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட ரிஷிவந்தியத்துக்கு வந்து கொண்டிருந்தாா்.

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே லாரி வந்தபோது, பாபுவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாம். இதனால், லாரியை சாலையோரத்தில் நிறுத்திய அவா், இருக்கையில் அமா்ந்தபடியே உயிரிழந்தாா்.

தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாபுவின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.