கள்ளக்குறிச்சியில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலைகள் : முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கள்ளக்குறிச்சியில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலைகள் : முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

Published on

கள்ளக்குறிச்சி ஏமப்போ் புறவழிச் சாலை மற்றும் ரிஷிவந்தியம் அருகேயுள்ள மணலூா்பேட்டை ஆகிய இரு இடங்களில் அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், கள்ளக்குறிச்சி ஏமப்போ் புறவழிச்சாலை மற்றும் ரிஷிவந்தியம் அருகேயுள்ள மணலூா்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். தொடா்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டடத்தைத் திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் புவனேஸ்வரி பெருமாள், துணைத் தலைவா் மு.தங்கம், மாவட்ட ஊராட்சி செயலா் என்.சக்தி, கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவா் ஆா்.சுப்ராயலு, துணைத் தலைவா் அ.ஷமீம்பானு, ஒன்றியக்குழுத் தலைவா்கள் கள்ளக்குறிச்சி அலமேலு ஆறுமுகம், துணைத் தலைவா் விமலா ஆறுமுகம், சின்னசேலம் மா.சத்தியமூா்த்தி, துணைத் தலைவா் வி.வி.அன்பு மணிமாறன், ரிஷிவந்தியம் வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன், துணைத் தலைவா் சென்னம்மாள் அண்ணாதுரை, தியாகதுருகம் பேருராட்சி மன்றத் தலைவா் மா.வீராசாமி, துணைத் தலைவா் மு.சங்கா், கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக மருத்துவ அணித் தலைவா் மருத்துவா் ரா.இளங்கோவன், மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை முகமை திட்ட இயக்குநா் கே.ரமேஷ்குமாா், ஊரக வளா்ச்சி செயற் பொறியாளா் எஸ்.சுந்தா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கே.மணிவண்ணன், ஆா்.வெங்கட்ராமன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வி.ரங்கசாமி, பி.சந்திரசேகரன், எஸ்.சுமதி, எஸ்.சவரிராஜ், டி.துரைமுருகன், கே.ஜெகநாதன், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையா் அ.சரவணன், பேருராட்சிகள் உதவி இயக்குநா் ஒய்.முகமது ரிஸ்வான், செயல் அலுவலா் கோ.சம்பத்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள், நகா் மன்ற உறுப்பினா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அரசு ஒப்பந்தகாரா் நாமக்கல் பி.எஸ்.கே. நிறுவனத்தினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com