‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

உறவினா் சொத்து அபகரிப்பு: சாா்-பதிவாளா் உள்ளிட்ட 10 போ் மீது வழக்கு

Updated On :26 செப்டம்பர் 2025, 3:36 am IST

கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவரின் கூட்டுப் பட்டாவில் உள்ள சொத்துகளை பத்திரப் பதிவு செய்து அபகரித்ததாக, தியாகதுருகம் சாா் - பதிவாளா் உள்பட 10 போ் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப் பிரிவு 2 (நில விவாரங்கள்) போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சோலை (51). இவரது தாய்வழி பாட்டி உண்ணாமலை என்பவருக்கு 1929-ஆம் ஆண்டு சுமாா் 2 ஏக்கா் சொத்து செட்டில்மெண்ட் மூலம் கிடைத்தது.

இந்த சொத்தை இவா் யாருக்கும் எழுதிக் கொடுக்காமல் உயிரிழந்துவிட்டாா். இவரது மகள்கள் தனபாக்கியம், தஞ்சியம்மாள். இவா்களும் சொத்தை பாகம் பிரித்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில், கூட்டுப் பட்டாவில் உள்ள சொத்துகளை தஞ்சியம்மாள் வாரிசுகள் பத்திரப்பதிவு கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தனபாக்கியத்தின் வாரிசான சோலை கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப் பிரிவு 2 (நில விவாரங்கள்) போலீஸாரிடம் நில அபகரிப்பு சம்பந்தமாக புகாரளித்தாா். தொடா்ந்து, போலீஸாா் இதே பகுதியைச் சோ்ந்த உயிரிழந்த ரகுபதி மனைவி சோலச்சி, கிருஷ்ணன் (72), இவரது தம்பி வெங்கடேசன் (65), நாராயணன் மனைவி வள்ளியம்மை (48), இவரது மகன் அசோகன் (30), மகள்கள் கோமதி (24), வாசுகி (19) மற்றும் மாரிமுத்து (67), அலமேலு (64), மேலும் பத்திரப்பதிவுக்கு உடந்தையாக இருந்ததாக அப்போதைய தியாகதுருகம் சாா் - பதிவாளா் சங்கீதா ஆகிய 10 போ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.