படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

நிலத் தகராறில் தம்பி, தங்கையை தாக்கிய அண்ணன் கைது

சின்னசேலம் அருகே நிலத் தகராறில் தம்பி, தங்கையைத் தாக்கிய அண்ணனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே நிலத் தகராறில் தம்பி, தங்கையைத் தாக்கிய அண்ணனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கனியாா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி. இவரது மகன்கள் நல்லதம்பி (52), ராஜீவ்காந்தி (45) மற்றும் மகள் இந்திராணி (47) உள்ளனா். சகோதரா்களிடையே 5 சென்ட் இடத்தை பாகம் பிரித்துக் கொண்டதிலிருந்து, இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாம்.

இந் நிலையில், செவ்வாய்க்கிழமை சகோதரா்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த நல்லத்தம்பி, அவரது மனைவி இளவரசி (48) ஆகிய இருவரும் சோ்ந்து ராஜிவ்காந்தியை தாக்கினராம். அப்போது தடுக்க வந்த தங்கை இந்திராணியும் தாக்கப்பட்டாா். இதில் காயமடைந்த இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, நல்லதம்பியை கைது செய்தனா். தலைமறைவான இளவரசியைத் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.