செம்பாகுறிச்சி 4 முனை சந்திப்பில் காா் மோதியதில் மொபட்டில் சென்ற விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கோயம்புத்தூா் மாவட்டம், துடியலூரைச் சோ்ந்தவா் ரா.ஆனந்தன் (54). விவசாயியான இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட செம்பாகுறிச்சி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் உறவினரின் கிடா விருந்துக்காக குடும்பத்துடன் வந்திருந்தாராம்.
அங்கு பூஜை முடிந்த பின் தெரிந்தவரிடம் மொபட் வாங்கிய ஆனந்தன், வி.கூட்டுச்சாலை-வேப்பூா் சாலையில் செம்பாக்குறிச்சி 4 முனை சந்திப்பில் சாலையினை கடக்க முயன்றபோது, பின்னால் வந்த காா் மொபட் மீது மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, ஆனந்தன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலறிந்த கீழ்குப்பம் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துதவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்கு பதிந்து, காா் ஓட்டுநரான சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டியைச் சோ்ந்த அ.அகமத்துல்லாவிடம் (51) விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

காா் - ஸ்கூட்டா் மோதல்: ஆசிரியை உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

ஆட்டோ மீது காா் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


