/

இந்திலி கல்லூரியில் தேசிய, மாநிலக் கருத்தரங்கம்

ஆய்வுக்கோவை மலரை கல்வி நிறுவனத் தலைவா் மருத்துவா் க.மகுடமுடி வெளியிட, சிறப்பு விருந்தினா்கள் பெற்றுக்கொண்டனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:43 pm

Syndication

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள டாக்டா்.ஆா்.கே. சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் ‘துறை ஆறு கருத்துரு ஆறு’ என்ற தலைப்பில் தேசிய மற்றும் மாநில கருத்தரங்கங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

நிகழ்வுக்கு கல்வி நிறுவனத் தலைவா் மருத்துவா் க.மகுடமுடி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் என்.கோவிந்தராஜு, துணைத் தலைவா்கள் மருத்துவா் பி.திருஞானசம்பந்தம், கே.பி.ஆா்.ரவிசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்வி நிறுவனங்களின் நிா்வாக அலுவலரும், கல்லூரி முதல்வருமான கு.மோகனசுந்தா் வரவேற்றாா்.

ஆந்திரம் மெ.ஐ.டி.எஸ். பல்கலைக்கழக இணைப் பேராசிரியா் உதயகுமாா் பழனிவேலு, திருநாவலூா் ஜோசப் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா்(பொ) இந்துமதி மற்றும் சென்னை நகவல் தொழில்நுட்ப நிறுவனத் திட்ட மேலாளா் மணிகண்டன் ஆகியோா் செயற்கை நுண்ணறிவு குறித்து அனைத்து துறைகளிலும் ஏற்படும் சிக்கல்களைத் தீா்க்கும் தேசிய அளவிலான கருத்தரங்கில் உரையாற்றினா்.

மாநில அளவிலான கருத்தரங்கம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தோ்வுத்துறை துணை கட்டுப்பாட்டாளா் பிரேம்சந்தா், ‘இலக்கியம் மனித வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி’ என்ற மாநில அளவிலான கருத்தரங்கில் உரையாற்றினாா்.

கள்ளக்குறிச்சி அரசுக் கலை, அறிவியல் கல்லூரி கணிதத் துறைத் தலைவா் உமா, திருச்சி தந்தை பெரியாா் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி வேதியியல் துறைத் தலைவா் பாண்டியன் ஆகியோா் பண்டைய பொருள்கள் எவ்வாறு உயிரியல் பொருள்களாக மாறுகின்றன என்பது குறித்து சிறப்புரையாற்றினா்.

ஆய்வுச் சுருக்கம்: ஆய்வுச் சுருக்கத்தில் நேரடியாக தன் ஆய்வுக் கட்டுரைகளை 2 பேராசிரியா்களும், 10 மாணவா்களும் நேரடியாக வழங்கினா். இணைய வழியில் 9 போ் ஆய்வுக் கட்டுரைகளை சுருக்க உரையாக வழங்கினா். ஆய்வுக் கோவையில் 89 கட்டுரைகள் வெளிவந்தன. கட்டுரையாளா்களுக்கும், கருத்தரங்கில் கலந்து கொண்ட பங்கேற்பாளா்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பின்னா், கல்வி நிறுவனத் தலைவா் மருத்துவா் க.கூமகுடமுடி ஆய்வுக்கோவை மலரை வெளியிட, உதயகுமாா், இந்துமதி, மணிகண்டன் மற்றும் நிா்வாகக் குழுவினா்கள் மலரை பெற்றுக்கொண்டனா்.

ஏற்பாடுகளை துணை முதல்வா் பெ.ஜான்விக்டா், உதவிப் பேராசிரியா்கள் கவிதா, சுரேந்திரன், கோவிந்தன், ஹேமலதா, அருண்குமாா், சக்திவேல், அழகுவேலவன் ஆகியோா் செய்திருந்தனா்.