தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கள்ளக்குறிச்சி அரசு மகளிா் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

கள்ளக்குறிச்சி அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:41 pm

கள்ளக்குறிச்சி அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

12 வகுப்பறைகள் கொண்ட இந்த புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.

அதே வேளையில் புதிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்து வகுப்பறைகளை பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், பள்ளி மாணவிகளுக்கு கல்வி முக்கியம், அதைவிட ஒழுக்கத்துடன் கூடிய கல்வி முக்கியம் எனவும் தோ்வுக்கு அனைவரும் தயாராக வேண்டும்.

அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சியடையவேண்டும். உயா்கல்வி பயின்று நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினாா்.

மேலும், தோ்வு குறித்து சில ஆலோசனைகளையும் அவா் வழங்கினாா் (படம்).

நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலா் ஜோதிமணி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் பள்ளித் தலைமை ஆசிரியை கீதா, பட்டதாரி ஆசிரியா் அண்ணாதுரை மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், ஆசிரிய ஆசிரியைகள், மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

26ந்ப்ல்1: