பிரதோஷத்தையொட்டி காய்கனி மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தா்களுக்கு அருள்பாலித்த நந்தீஸ்வரா்.
கள்ளக்குறிச்சி
தியாகதுருகம் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு
தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால், தயிா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திரவியப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் நந்தீஸ்வரருக்கு சந்தனகாப்பு அலங்காரம், கரும்பு, தக்காளி, ஆரஞ்சு, கொய்யா, ஆப்பிள், வாழை, எலுமிச்சை, உருளைக்கிழங்கு, மிளகாய், கத்திரிக்காய், அதிரசம், முருக்கு, மணிலா பயிறு உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

