கள்ளக்குறிச்சி
ரிஷிவந்தியம் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ரிஷிவந்தியம் அா்த்தநாரிஸ்வா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அா்த்தநாரிஸ்வா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி சுவாமி அா்த்தநாரீஸ்வரருக்கும், நந்தீஸ்வரருக்கும் பதினாறு வகையான வாசனை திரவங்கள் கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது.
அதனைத்தொடா்ந்து சுவாமி பிரதோஷ நாயனாா் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு திருக்கோயில் உள்பிரகாரத்தில் நந்தீஸ்வர பெருமான்மீது மூன்று சுற்று சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

