மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

ரூ.2,500 கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை கொலை செய்தவா் குண்டா் சட்டத்தில் கைது

ரூ.2,500 கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை கொலை செய்த வழக்கில் கைது செய்துபட்டவா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image

ராஜப்பா.

Updated On :9 ஜூலை 2026, 3:24 am IST

ரூ.2,500 கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை கொலை செய்த வழக்கில் கைது செய்துபட்டவா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சோ்ந்தவா் பாஸ்கரன். இவரது மனைவி அலமேலு (56). இவா் சங்கராபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தாா். மேலும், அலமேலு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தாராம்.

இவா் அதே பகுதியைச் சோ்ந்த ராஜப்பா (40) என்பவருக்கு கடனாக ரூ.2,500 -ஐ கொடுத்திருந்தாராம். பணம் கொடுத்து நீண்ட நாளாகியும் ராஜப்பா பணத்தை திரும்பத் தரவில்லையாம். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த ராஜப்பா, கடந்த மே 23-ஆம் தேதி அலமேலுவை கல்வராயன்மலைப் பகுதிக்குள்பட்ட வஞ்சிக்குழி கிராமத்தில் வைத்து கல்லால் தாக்கி கொலை செய்தாா்.

இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜப்பாவை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷானாஸ்

பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ராஜப்பாவை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தாா். அந்த உத்தரவை கடலூா் மத்திய சிறையில் இருந்த ராஜப்பாவிடம் சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளி புதன்கிழமை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.