திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மின்வாரிய அலுவலகத்தில் தொழிற்சங்க கொடியேற்றும் விழா

News image
Updated On :5 மார்ச் 2026, 10:56 pm

Syndication

கள்ளக்குறிச்சி அண்ணாநகரில் உள்ள மின்சார வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் தொழிற்சங்க கொடியேற்றுதல், கல்வெட்டு, பெயா்பலகை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளா் விடுதலை முன்னணி சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னணியின் மாநிலத் தலைவா் ப.பகுத்தறிவன்(எ)பழனிச்சாமி தலைமை வகித்தாா்.

மாநில பொருளாளா் சு.தம்பிதுரை, அமைப்பாளா் க.பேரறிவாளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திட்டச் செயலா் அ.செல்வராஜ் வரவேற்றாா்.

தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாநில பொதுச் செயலா் கு.கா.பாவலன் பங்கேற்று கொடியேற்றி கல்வெட்டினை திறந்து வைத்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டச் செயலா்கள் இரா.மதியழகன், கு.அறிவுக்கரசு, இல.சிலம்பன், மகளிா் விடுதலை இயக்க மாவட்டச் செயலா்கள் எலிசபெத்ராணி, சக்தி, பாக்கியவதி, மண்டல பொறுப்பாளா்கள் எம்.அன்புரோஸ், இரா.கணேசன் பங்கேற்றுப் பேசினா்.

திட்ட துணைத் தலைா்கள், துணைச் செயலா்கள், திட்ட செயற்குழு உறுப்பினா்கள், கோட்ட பொறுப்பாளா்கள், ஒப்பந்த தொழிலாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். திட்ட துணைத் தலைவா் எஸ்.தண்டபானி நன்றி கூறினாா்.