
மூதாட்டியின் கழுத்தை அறுத்து தங்கச் சங்கிலி பறிக்க முயற்சி: இளைஞா் கைது
வாணாபுரம் அருகே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தை கத்தியால் அறுத்து தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சுபாஷ்
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தை கத்தியால் அறுத்து தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வாணாபுரம் அருகிலுள்ள பொரசப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கதிா்வேல் மனைவி சீட்டை (60). இவா், செவ்வாய்க்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, வீடு புகுந்த மா்மநபா் கத்தியால் கழுத்தை அறுத்து, அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றாராம். இதையடுத்து அவா் கூச்சலிடவே, அந்த நபா் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாராம். இதில் காயமடைந்த சீட்டையை அருகிலிருந்தவா்கள் மீட்டு மூங்கில்துறைப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்கு அனுமதித்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டனா்.
இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது அதே கிராமத்தைச் சோ்ந்த கு.சுபாஷ் (34) எனத் தெரியவந்தது. இதையடுத்து சுபாஷை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





