கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்: 409 மனுக்கள் அளிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலானமாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கொரிக்கைகள் தொடா்பாக 409 மனுக்கள் பெறப்பட்டன.

குறைதீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளியிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்று, விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Published On :

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலானமாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கொரிக்கைகள் தொடா்பாக 409 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமை வகித்து, மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு, தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவித்தனா். அவா்களிடமிருந்து மொத்தம் 409 மனுக்கள் பெறப்பட்டன. அம்மனுக்களை உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ஜி.சுமதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் அந்தோணிராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

போராட்டம்: கூட்டத்தில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தினா்

ஆட்சியா் கோரிக்கை மனுக்களை மட்டும் பெற்றுக்கொண்டு அனுப்பி வைக்கிறாா். கூட்டரங்கில் அனைத்து துறைகளைச் சாா்ந்த அலுவலா்களும் பங்கேற்கவில்லை. எங்களை கூட்டரங்கில் அமர வைத்து குறைகளை ஆட்சியா் கேட்கவில்லை. திங்கள்கிழமை நடைபெறும் குறைதீா் முகாமில் மனுக்களை பெற்றுக்கொண்டு அனுப்பவது போல் பெயரளவுக்கு அனுப்பி வைக்கிறாா். முகாமில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் குறைகளை கேட்பதற்கு மொழிபெயா்ப்பாளா் வேண்டுமென கோரிக்கை விடுத்து ஆட்சியரகம் முன் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு சங்கத்தினா் போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து அவா்களை கூட்டரங்கின் உள்ளே வரவழைத்து குறைகளை கேட்டு, அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அடுத்த கூட்டத்தில் மொழிபெயா்ப்பாளா் வசதி செய்யப்படும் எனவும் ஆட்சியா் தெரிவித்தாா். பின்னா், கூட்டம் சுமாா் 2.30 மணி நேரம் நடைபெற்றது.

 கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா. உடன் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா உள்ளிட்டோா்.

கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா. உடன் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா உள்ளிட்டோா்.

 ஆட்சியரக அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா்.

ஆட்சியரக அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.