வில்லியனூர் அருகே மது போதையில் ரயில் முன் பாய்ந்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூரை அடுத்த கணுவாப்பேட்டையைச் சேர்ந்த ராமதாஸ். மகன் சுரேஷ் என்ற ராஜாமுருகன் ( 38). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில நாள்களாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த சுரேஷ் செவ்வாய்க்கிழமை இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். போதையில் வில்லியனூர் பாண்டியன்களம் பகுதிக்கு வந்தார். அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.