புதுச்சேரியில் போக்குவரத்து மேலாண்மை இல்லை; போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் முறையாக ஈடுபடுவதில்லை என செவ்வாய்க்கிழமை ரகசிய ஆய்வு செய்த பிறகு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி குற்றம்சாட்டினார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு பாகூர் காவல் நிலையத்தை ஆய்வு செய்த துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, ஆவணப் பதிவுகளை முறையாக மேற்கொள்ள போலீஸாருக்கு அறிவுறுத்தினார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கிழக்கு கடற்கரைச் சாலை, அண்ணா சாலை, இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளின் போக்குவரத்து நிலையை தனியார் காரில் சென்று ஆய்வு செய்து, புகைப்படம், விடியோ எடுத்துள்ளார்.
ஆய்வுக்குப் பிறகு கிரண் பேடி கூறியதாவது: போக்குவரத்து போலீஸார் தங்கள் பணிகளை சரிவர செய்யவில்லை. போக்குவரத்து சீரமைப்புப் பணிகளை எவ்வாறு செய்வது என்றே தெரியாமல் உள்ளனர். போக்குவரத்து சிக்னல் அருகே நிற்காமல் சாலையோரம் பேசியபடி நிற்கின்றனர்.
போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் எதிலும் போக்குவரத்து போலீஸார் ஈடுபடவில்லை. பல போக்குவரத்து சிக்னல்களில் போக்குவரத்து காவலர்களையே காணவில்லை. அதே போல, நகரப் பகுதியில் உயரதிகாரிகள் யாரும் ரோந்துப் பணியில் ஈடுபடவில்லை.
புதுச்சேரியில் போக்குவரத்து மேலாண்மை அவசியம் தேவையாக உள்ளது. போக்குவரத்து சீரமைப்பில் போலீஸாரின் பங்கு குறைவாக உள்ளது. குறிப்பாக, கிழக்கு கடற்கரைச் சாலையில் இந்த நிலை அதிகளவாக உள்ளது. போக்குவரத்து சிக்னல்கள் மங்கலாகவே எரிகின்றன. தொலைவிலிருந்து பார்த்தால் சரியாகத் தெரியவில்லை. அத்துடன் போக்குவரத்து சிக்னல்கள் அருகில் விளம்பரத்துக்காக அதிகளவிலான பதாகைகள் வைக்கப்படுகின்றன. அதையும் தடுக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலை வளைவில் கண்டிப்பாக எவ்வித பதாகைகளோ, விளம்பரப் பலகைகளோ இருக்கக் கூடாது. இதனை உயரதிகாரிகள் ரோந்து சென்று கவனித்து அப்புறப்படுத்தவில்லை. இப்படி கவனிக்காமல் இருந்த உயரதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நான் தனியார் காரில் சென்று ஆய்வு செய்தேன். தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெறும். பொதுமக்களும் போக்குவரத்துப் பிரச்னை தொடர்பான புகார்களை ஆதாரபூர்வமாக 1031, 100 ஆகிய தொலைபேசி எண்களில் பதிவு செய்யலாம்.
புகைப்படம், விடியோ இருந்தால் நேரடியாக ராஜ்நிவாஸூக்கு வந்து திங்கள் முதல் புதன்கிழமை வரை மாலை 5 மணிக்கு முன்அனுமதி பெறாமலேயே வந்து நேரடியாக என்னை சந்திக்கலாம் என அதில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி முறையாக மேற்கொள்ளப்படாதது குறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளிடம் ஆளுநர் விசாரணை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 17 - நேரலை!

ஹரியாணா தொழிற்சாலைகளில் நாள்தோறும் 5 நிமிட யோகா இடைவேளை அறிமுகம்!

விசிக மாநாட்டில் நெரிசல்! உரையை சுருக்கமாக முடித்த திருமாவளவன்!

என்டிஏ நடத்தும் தேர்வுகளில் தொடர் முறைகேடு! 50 பணியாளர்கள் நீக்கம்!
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |


