"கிராமங்களில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு அவசியம்'

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை கிராமங்களிலும் மேற்கொள்ள வேண்டும் என புதுவை துணை நிலை ஆளுநர்  கிரண் பேடி வலியுறுத்தினார்.
Updated on
1 min read

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை கிராமங்களிலும் மேற்கொள்ள வேண்டும் என புதுவை துணை நிலை ஆளுநர்  கிரண் பேடி வலியுறுத்தினார்.
இந்தியா டர்ன்ஸ் பிங்க் அமைப்பின் புதுச்சேரி கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை ஆளுநர் கிரண் பேடி புதுச்சேரி கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார். 
அப்போது அவர் பேசுகையில், மார்பகப் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க மார்பக தசைகள் கடினமாக இருப்பதாக உணர்ந்தால் அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை கிராமப்புறங்களிலும் மேற்கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் முதல்வர் வே.நாராயணசாமி,  பொதுப்பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம்,  சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி, முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமிநாராயணன்  எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com