கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தர வலியுறுத்தல்

வீடில்லாத ஏழைகளுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தர புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:45 am

DIN

வீடில்லாத ஏழைகளுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தர புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.  அந்தக் கட்சியின் காமராஜர் நகர் தொகுதியில் 3-வது மாநாடு தனியார் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளர் ஜி.விசுவநாதன் மாநாட்டு கொடி ஏற்றினார்.  தேசியக் குழு உறுப்பினர் நாரா. கலைநாதன் மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினார்.
துணைச் செயலாளர்கள் ராமமூர்த்தி,  சலீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொகுதி செயலாளர் துரை.செல்வம்,  பொருளாளர் மாதவராமன்,  துணைச் செயலாளர்கள் தயாளன், ராமராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்:  சாரம் எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அரசு உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்.  சாரம் வார்டுக்கு உள்பட்ட பகுதியில் உள்ள வீடில்லா ஏழைகளுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி வீடுகள் கட்டித்தர வேண்டும். 
புதை மின்வட திட்டத்தை இப்பகுதியில் அமல்படுத்த வேண்டும்.  லெனின் நகர் பகுதியில் உள்ள காவல் உதவி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.   
வாஞ்சிநாதன் நகரில் 50 ஆண்டு காலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.