புதுச்சேரியில் ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் என்று புதுவை பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்க (ஏஐடியூசி) பேரவை வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பேரவையின் கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள ஏஐடியூசி தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேரவைத் தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் அபிஷேகம் நடைபெற்ற வேலைகள், எதிர்கால கடமைகள் குறித்துப் பேசினார்.
ஏஐடியூசி பொதுச்செயலாளர் தினேஷ் பொன்னையா, செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் பேசினர். பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்க பொருளாளர் தேசிகன், துணைத் தலைவர்கள் பூபதி, கேசவன், ஏழுமலை, பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள் விவரம்: புதுச்சேரியில் உள்ள ஏஎப்டி, சுதேசி, பாரதி ஆகிய 3 பஞ்சாலைகளை புனரமைப்பு செய்ய ரூ.500 கோடியை மானியமாக மத்திய அரசு வழங்க வேண்டும். வேலைவாய்ப்பை அதிகரிக்க இந்த 3 ஆலைகளையும் இணைத்து ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும். அரசு மற்றும் அரசு சார்பு துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடை, பள்ளி சீருடை, ஏழைகளுக்கான இலவச துணி வகைகள், ராணுவ சீருடை, போலீஸ் சீருடை அனைத்தையும் ஏஎப்டி பஞ்சாலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 ஆலைகளிலும் பணியாற்றும் நிரந்தரமற்ற தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணிக்கொடை மற்றும் வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







