/

இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை 8-இல் தொடக்கம்

புதுவை யூனியன் பிரதேசத்தில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை ஜூன் 8-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

புதுவை யூனியன் பிரதேசத்தில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை ஜூன் 8-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
 புதுவை யூனியன் இளைஞர் காங்கிரஸýக்கு கடைசியாக கடந்த 2012-இல் தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 அதன் பிறகு தொடர்ச்சியாக தேர்தல் நடத்தப்படவில்லை.
 தேர்தலை நடத்தக் கோரி பல்வேறு நிர்வாகிகள் இளைஞர் காங்கிரஸ் தலைமைக்கு கோரிக்கை விடுத்தனர்.
 இதனை ஏற்று அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கடந்த ஆண்டு டிச.11-ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கை தொடங்குவது என்று முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டது.
 அதில் வயது வரம்பு 1.1.1982 முதல் 31.12.2017 வரை உள்ளவர்கள் உறுப்பினர்களாக சேரலாம் என்ற விதிமுறை கூறப்பட்டுள்ளது.
 இதையடுத்து உறுப்பினர் சேர்க்கை தொடக்க விழா ஜூன் 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
 இதில், முதல்வர் வே.நாராயணசாமி, கட்சியின் பிரதேச கமிட்டித் தலைவரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சீனிவாஸ், செயலாளர் ஜெபி மேத்தர் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.