தீபாவளி சீட்டு நடத்தியவர் மோசடி செய்ததால், சீட்டு சேர்க்க உதவிய பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் கண்ணதாசன் வீதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். வேன் ஓட்டுநர். இவரது மனைவி செண்பகவள்ளி (46). லாசுப்பேட்டை ஜீவானந்தபுரத்தைச் சேர்ந்த ஆதிமூலம் மனைவி பாஞ்சாலி. இவர் தீபாவளி சீட்டு நடத்தி வந்தாராம். இதை நம்பி ஏராளமான பெண்கள் அவரிடம் சீட்டுக் கட்டினராம். 25 சீட்டு பிடித்து தந்தால், ஒரு சீட்டு இலவசம் என பாஞ்சாலி கூறியதால், அதை நம்பி செண்பகவள்ளி தனது பகுதியை சேர்ந்த பலரை சீட்டில் சேர்த்து விட்டாராம். ஆனால், தீபாவளி நெருங்கும் வேளையில் பாஞ்சாலி தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், சீட்டில் சேர்த்துவிட்ட செண்பகவள்ளியிடம் ஏராளமானோர் அதுகுறித்து கேட்டனராம். இதில், மனமுடைந்த செண்பகவள்ளி எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.
இதனால், மயக்கமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் புதுச்சேரி அரசு மருத்துமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சோலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தி ராமா் கோயில் முறைகேடு! சட்ட அதிகாரமில்லா விசாரணைக் குழு என கேஜரிவால் குற்றச்சாட்டு!

என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு புத்தகத்தில் அவசரநிலை குறித்த பாடம் சேர்ப்பு!

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

இரண்டாம் பாதியில் களமிறங்கிய நெய்மர்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்!
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |


