புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, செப். 1 -ஆம் தேதி முதல் அக். 31- ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. 2019- ஆம் ஆண்டு ஜனவரி 1- ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு இந்தப் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி, 18 வயது நிறைவடைந்தோர் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் புதுவை ஆட்சிப் பரப்பில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியில் தனியார் பள்ளி மாணவர்கள் புதுவை தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், 18 வயது நிறைவடைந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்களுக்கு விண்ணப்பப் படிவத்தை வழங்கினர்.
முதல் முறையாக புதுவையில்தான் தேர்தல் துறை மாணவர்களுடன் இணைந்து வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகளை வீடு வீடாகச் சென்று மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம்: சசி தரூர் நம்பிக்கை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies

மும்பை இந்தியன்ஸுக்காக அதிக ரன்கள்; சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரிக்கல்டான்!
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

