அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

சென்னை - கச்சிகுடா, சென்னை - டெராடூன்: ரயில் சேவையை புதுச்சேரி வரை நீட்டிக்க எம்.பி. வலியுறுத்தல்

சென்னை - கச்சிகுடா,  சென்னை - டெராடூன் ஆகிய விரைவு ரயில்களின் சேவையை புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும்

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

சென்னை - கச்சிகுடா,  சென்னை - டெராடூன் ஆகிய விரைவு ரயில்களின் சேவையை புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும் என்று புதுவை மாநிலங்களவை உறுப்பினர் நா.கோகுலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை - காக்கிநாடா - சர்கார் தினசரி விரைவு ரயில், சென்னை - கச்சிகுடா விரைவு ரயில், சென்னை - டேராடூன் விரைவு ரயில் ஆகியவற்றின் சேவைகளை புதுச்சேரிக்கும் விரிவுபடுத்த வேண்டும். 
இதுவரை மாற்றுப் பாதை இல்லாத காரணத்தால் இது சாத்தியம் இல்லாமல் இருந்தது. தொடர் வலியுறுத்தலுக்குப் பின்னர், சின்னபாபுசமுத்திரத்தை மாற்றுத் தடம் கொண்ட நிலையமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும், உடனடியாக வளவனூரை மாற்றுத் தடம் கொண்ட நிலையமாகச் செயல் திட்டத்தில் சேர்க்க நடவடிகை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னைக்கு திண்டிவனம் வழியாக புதிய ரயில் பாதைக்கான போக்குவரத்து ஆய்வுப் பணிகள் முடித்த நிலையில், இதை மத்திய ரயில்வே வாரியம் கைவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகும். இதைக் கைவிடக் கூடாது. இதுகுறித்து, ரயில்வே வாரியம், ரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தப்படும்.
புதுவையின் எதிர்கால ரயில் போக்குவரத்து தேவைகளைக் கருத்தில் கொண்டு பெருங்குடி - கடலூர் புதிய வழித் தடம் அமைக்கப்படும் போது, இரண்டு புதிய பராமரிப்புப் பாதைகள் அமைக்கப்படும் என்பது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தி என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.