
ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்வதில் தாமதம் கூடாது: தொல்.திருமாவளவன்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கைதிகள் 7 பேரை விடுதலை செய்வதில் காலதாமதம் செய்யக் கூடாது என்று
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கைதிகள் 7 பேரை விடுதலை செய்வதில் காலதாமதம் செய்யக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த
பேட்டி:
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் அறிக்கைப்படி வாராக்கடன் ரூ. 12 லட்சம் கோடியைச் செலுத்தாதவர்கள் மீது மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க
வில்லை.
எனவே, இதற்கு தார்மிகப் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்தும், பெறு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையிலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை புதுவை அரசு விடுதலை செய்ய வேண்டும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை எடுத்த முடிவுக்கு ஆளுநர் காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
புதுவையில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் முழுவதையும் புதுவை அரசே செலுத்த வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து உள்ளதாக உளவுத் துறை மூலம் தகவல் கிடைத்தது. தற்போது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
பேட்டியின் போது, கட்சியின் பொதுச் செயலர் ரவிக்குமார், புதுவை மாநில முதன்மைச் செயலர் தேவ.பொழிலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






