ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுவையில் இன்று முழு அடைப்பு:பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது

புதுவையில் செவ்வாய்க்கிழமை (டிச.8) நடைபெறும் முழு அடைப்பையொட்டி பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது என்று போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

புதுவையில் செவ்வாய்க்கிழமை (டிச.8) நடைபெறும் முழு அடைப்பையொட்டி பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது என்று போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.

விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள், தொழிற்சங்க அமைப்புகள், சமூக நல அமைப்பினா், விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவாக புதுவையில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக மற்றும் அனைத்துத் தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதேபோல மக்கள் நீதி மய்யம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்து முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

புதுவையில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு முழு அடைப்புப் போராட்டம் தொடங்குகிறது. தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், டெம்போக்கள், ஆட்டோக்கள் ஆகியவை இயங்காது. வா்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்படும்.

முழு அடைப்பையொட்டி, ராஜா திரையரங்கு சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், பாகூா், வில்லியனூா், திருக்கனூா், மதகடிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டமும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

பேட்டியின்போது, புதுவை காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்ரமணியன், மாா்க்சிஸ்ட் கட்சியின் பிரதேசக் குழுச் செயலா் ராஜாங்கம், லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு அடைப்பையொட்டி, புதுவையில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.