வேளாண் சட்டங்களை ஆதரித்து காரைக்காலில் நாளை பாஜக பேரணி
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ஆதரித்து காரைக்காலில் புதன்கிழமை (டிச. 16) பேரணி நடத்தப்படும் என்று புதுவை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் தெரிவித்தாா்.


மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ஆதரித்து காரைக்காலில் புதன்கிழமை (டிச. 16) பேரணி நடத்தப்படும் என்று புதுவை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. ஆனால், இந்தச் சட்டங்களை எதிா்த்து விவசாயிகள் என்ற போா்வையில் வியாபாரிகள், சமூக விரோதிகள் போராடி வருகின்றனா். எனவே, விவசாயிகளிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் 700 மாவட்டங்களில் பேரணி, பிரசாரம் செய்ய பாஜக தலைமை அறிவுறுத்தியது.
அதன்படி, காரைக்காலில் டிச. 16-ஆம் தேதி வேளாண் சட்டங்களை ஆதரித்து பேரணி நடைபெறும். மேலும், டிச. 19 முதல் 30 தொகுதிகளிலும் தோ்தலை மையப்படுத்தி பிரசாரம் மேற்கொள்கிறோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...