கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கக் கோரிக்கை
புதுச்சேரி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு, கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.12.5 கோடியை வழங்க வேண்டுமென முதல்வா் என்.ரங்கசாமியிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.


புதுச்சேரி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு, கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.12.5 கோடியை வழங்க வேண்டுமென முதல்வா் என்.ரங்கசாமியிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி லிங்காரெட்டிப்பாளையத்தில் உள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலை நிதி நெருக்கடி காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. மீண்டும் ஆலையை இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் டி.பி.ஆா்.செல்வம் தலைமையில் விவசாயிகள், சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை சனிக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்துக் கூறியதாவது: லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கடந்த 2014 முதல் 2017 வரை அனுப்பிய கரும்புக்கு விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். நிலுவைத் தொகை ரூ.12.5 கோடியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இந்தக் கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென முதல்வா் உறுதியளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...