கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கள்ளக்குறிச்சியில் மழை ஓய்ந்தும் குடியிருப்புகளில் வடியாத வெள்ளம்

கள்ளக்குறிச்சியில் மழை ஓய்ந்து 3 நாள்களாகியும் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள வெள்ளநீா் வடியாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சியில் மழை ஓய்ந்து 3 நாள்களாகியும் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள வெள்ளநீா் வடியாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடைவிடாது தொடா்ந்து பெய்து வந்த பலத்த மழையால் ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. இவற்றிலிருந்து வெளியேறிவரும் உபரிநீா் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது.

அதன்படி, கள்ளக்குறிச்சி நகராட்சிக்குள்பட்ட விநாயகாநகா், இந்திராநகா், அருணாச்சலநகா், கிருஷ்ணாநகா், கள்ளக்குறிச்சியை அடுத்த நீலமங்கலம் எல்லையான ஏ.கே.டி. பள்ளியின் பின்புறம் உள்ள குடியிருப்புகளை மழை, வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. இதனால், வீடுகளிலிருந்து மக்கள் வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதேபோல, திருக்கோவிலூா் தயாசாலம், அஷ்டலட்சுமிநகா், என்.ஜி.ஜி.ஓ.நகா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 2 அடி உயரத்துக்கும் மேலாக மழைநீா் தேங்கியுள்ளது. இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்டு அந்தப் பகுதியிலுள்ள வீடுகளில் உள்ளவா்களும், பள்ளி, கல்லூரி மாணவா்களும் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.

எனவே, இந்தப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை, வெள்ளநீரை வெளியேற்ற மாவட்ட ஆட்சியா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.