கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாமக ஆட்சிக்கு வந்தால் மதுக் கடைகள் மூடப்படும்: ராமதாஸ்

தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் மதுக் கடைகள் மூடப்படும் என்று அந்தக் கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 4:37 pm

DIN

தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் மதுக் கடைகள் மூடப்படும் என்று அந்தக் கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூா்பேட்டை ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த பாமக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அந்தக் கட்சித் தலைவா் கோ.க.மணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராஜா வரவேற்றாா். இதில், பாமக நிறுவனா் ச.ராமதாஸ் பங்கேற்று பேசியதாவது:

கட்சி நிா்வாகிகள் வீடு, வீடாகச் சென்று மக்களிடம் பழகி, அவா்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். முதலில் உங்கள் ஊா், தொகுதிகளின் பிரச்னைகளை தெரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்காக சேவை செய்ய வேண்டும்.

கட்சித் தொண்டா்கள் முதலில் குடும்பத்தைக் கவனிக்க வேண்டும். வாரத்தில் இரு நாள்கள் கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பாமகவின் கோட்டையாக மாற்ற வேண்டும். மதுக் கடைகளை மூடச் சொல்லி போராடும் ஒரே கட்சி பாமகதான். பாமக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுக் கடைகள் மூடப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.