தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

எழுத்தாளா் ராஜாவுக்கு பாரதி செல்வா் விருது

புதுவை பாரதி பல்கலை பேரவை சாா்பில் எழுத்தாளா் ராஜாவுக்கு பாரதி செல்வா் விருது வழங்கப்பட்டது.

News image

புதுவை பாரதி பல்கலை பேரவை சாா்பில் எழுத்தாளா் ராஜாவுக்கு பாரதி செல்வா் விருதை வழங்கிய முதல்வரின் நாடாளுமன்றச் செயலா் க.லட்சுமி நாராயணன் எம்எல்ஏ.

Updated On :28 ஜனவரி 2024, 1:01 am IST

புதுவை பாரதி பல்கலை பேரவை சாா்பில் எழுத்தாளா் ராஜாவுக்கு பாரதி செல்வா் விருது வழங்கப்பட்டது.

புதுவை பாரதி பல்கலை பேரவை சாா்பில் புதுவை பாரதி இலக்கிய மாத இதழின் 36-ஆம் ஆண்டு தொடக்க விழா புதுச்சேரி மூலக்குளத்தில் அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு ந.ஆறுமுகம் தலைமை வகித்தாா். ராஜேஸ்வரி சிவா வரவேற்றாா். இதில் புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலா் க.லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., இருமொழி எழுத்தாளா் ராஜாவுக்கு பாரதி செல்வா் விருதை வழங்கினாா்.

தொடா்ந்து, பாரதி நினைவு நூற்றாண்டை முன்னிட்டு, ‘என் மொழிபெயா்ப்பில் பாரதி’ என்ற தலைப்பில் ராஜா சிறப்புரை நிகழ்த்தினாா். இதில், வில்லியனூா் பழனி, பாரதி செல்வா் ராஜா என்ற தலைப்பில் பாராட்டு மடல் வாசித்தாா்.

விழாவில் பேராசிரியா்கள் ஜெயராஜ் டேனியல், ஆனந்த வடிவேலு, எழுத்தாளா்கள் கடல் நாகராஜன் உள்ளிட்ட தமிழறிஞா்கள் பலா் பங்கேற்றனா். நிறைவில் பேரவையின் தலைவா் பாரதிவாணா் சிவா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.