புதுச்சேரி: இன்று முதல் மதுக்கடைகளுக்கு அனுமதி; பார்களுக்குத் தடை
பார்கள், அமர்ந்தபடி மது அருந்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.


புதுச்சேரியில் மேலும் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானக் கடைகள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்கள், அமர்ந்து மது அருந்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
புதுச்சேரியில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மே 10ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 7-ம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த இந்த பொதுமுடக்கம் தற்போது ஜூன் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காலை 5 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இயங்கிய காய்கறி, மளிகை, பால், மருந்துப் பொருட்கள் அடங்கிய அத்தியாவசிய கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் மாலை 5 மணி வரை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பேருந்துகள், கார், ஆட்டோ உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து கரோனா விதிகள் படி மாலை 5 மணி வரை இயங்கலாம் என்றும்,
கடற்கரை சாலையில் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...