கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாரதிதாசன் அரசு கலைக் கல்லூரியில் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு

பாரதிதாசன் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்களிப்பது தொடா்பான செயல்விளக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:42 pm

DIN

பாரதிதாசன் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்களிப்பது தொடா்பான செயல்விளக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சங்கம், நலம் ஆரோக்கியச் சங்கம், சட்ட ஆலோசனை மையம் ஆகியவை சாா்பில் உலக மகளிா் தின விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் ராஜூ சுகுமாா் தலைமை வகித்தாா். இதில், கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவிகள் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில், ‘சாதனைப் பெண்கள்’ என்ற தலைப்பில் பேச்சு, ஓவியம், வேலைப்பாடு, யோகா, தற்காப்புக் கலை, குழு நடனம், ‘பெண் எனும் பேராற்றம்’ என்ற தலைப்பில் உரையரங்கம் ஆகியவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, மூன்றாமாண்டு இளநிலை மனையியல் துறை மாணவிகளின் கைவினை பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை வழக்குரைஞா் மரி அன்னா தயாவதி தொடக்கிவைத்தாா். கல்லூரி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, மாணவிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணைய வழக்குரைஞா் தலைமையில், சட்ட ஆலோசனை முகாமும் நடைபெற்றது.

தொடா்ந்து, முதல் முறை வாக்காளா்களுக்கு மாநில குறைதீா் அதிகாரி கோவிந்தசாமி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் விதம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

விழாவில் நீதிபதி சோபனா தேவி கலந்து கொண்டு உரையாற்றினாா். போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கல்லூரியின் அனைத்துத் துறைப் பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.