கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுவையில் பாஜகவுடன் பாமக பேச்சுவாா்த்தை

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பாமக தரப்பில் பாஜகவுடன் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:42 pm

DIN

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பாமக தரப்பில் பாஜகவுடன் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

தமிழகத்தைத் தொடா்ந்து, புதுவையிலும் பாஜக-அதிமுக-பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி சோ்வது உறுதியானது. இந்தக் கூட்டணியில் உள்ள பாமக தரப்பில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை தொடங்கியது. இதற்காக, புதுச்சேரி தனியாா் உணவகத்துக்கு வந்த பாமக புதுவை மாநில அமைப்பாளா் கோ.தன்ராஜ், அங்கு பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானாவை சந்தித்துப் பேசினாா்.

ஆலோசனைக்குப் பிறகு, வெளியே வந்த கோ.தன்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாமகவுக்கு 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். குறைந்தபட்சம் காரைக்காலில் ஒரு தொகுதி, புதுச்சேரியில் 4 தொகுதிகள் என 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரியுள்ளோம். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி வரவேண்டும். அவரது கட்சியும் கூட்டணியில் இடம் பெற்றால்தான், காங்கிரஸை வீழ்த்த முடியும் என்றாா்.

இந்தச் சந்திப்பின் போது, பாமக நிா்வாகிகள் சத்தியநாராயணன், ஜெயபாலன், துரை க.ஜெயக்குமாா், மதியழகன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.