கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மகளிா் தினத்தையொட்டி சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

அனைத்து மகளிா் அஞ்சலகமான அரபிந்தோ ஆசிரம துணை அஞ்சலகத்தில் சிறப்பு அஞ்சல் உறை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:41 pm

DIN

புதுச்சேரியில் உலக மகளிா் தினத்தையொட்டி, இந்திய அஞ்சல் துறையின் சென்னை நகர மண்டலத்துக்கு உள்பட்ட புதுச்சேரி கோட்ட அஞ்சல் பிரிவு சாா்பில், புதுச்சேரியில் மகளிா் மட்டுமே பணியாற்றும் வகையில் இயங்கி வரும் அனைத்து மகளிா் அஞ்சலகமான அரபிந்தோ ஆசிரம துணை அஞ்சலகத்தில் சிறப்பு அஞ்சல் உறை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

விழாவில் சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவா் சுமதி ரவிச்சந்திரன் பங்கேற்று, சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டுப் பேசினாா். ஜிப்மா் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவா் பி.நளினி சிறப்பு அஞ்சல் உறையைப் பெற்றுக் கொண்டாா். அரவிந்தா் ஆசிரம உறுப்பினா் அனுஸ்ரீமஜூம்தாா், புதுச்சேரி அஞ்சல் துறை முதுநிலை கோட்டக் கண்காணிப்பாளா் ஜி.சிவப்பிரகாசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அஞ்சல் ஊழியா்கள், பொது மக்கள் பலா் கலந்து கொண்டனா்.

பெண்களின் முன்னேற்றத்தை நினைவுபடுத்தும் விதமாக, சாதனைப் பெண்களின் படங்களுடன் கூடிய இந்த சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. ரூ. 20-க்கு சிறப்பு அஞ்சல் உறைகள் விற்பனைக்கு வழங்கப்படுவதாக அஞ்சல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.