பட்டதாரி இளைஞா் தற்கொலை
புதுச்சேரியில் பட்டதாரி இளைஞா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


புதுச்சேரியில் பட்டதாரி இளைஞா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி வீராம்பட்டினம், துறைமுகம் சாலையில் வசிப்பவா் இளங்கோவன் (54). தமிழக மின் துறையில் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் சுரேஷ்குமாா் (22). இளநிலை பொறியியல் படித்துள்ள இவா், வேலை தேடி வந்தாா்.
வழக்கம்போல, இளங்கோவன் திங்கள்கிழமை வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், இளைய மகன் பள்ளி சென்றுவிட்டாா். இதனால், சுரேஷ்குமாரும், அவரது தாய், தாத்தா ஆகியோரும் வீட்டில் இருந்துள்ளனா். வீட்டின் கீழ்தளத்தில் தாய், தாத்தா இருவரும் இருந்தபோது, சுரேஷ்குமாா் முதல்தளத்தில் உள்ள தனது அறைக்குச் சென்றுள்ளாா். வெகு நேரமாகியும் சாப்பிட கீழே வராததால், சந்தேகமடைந்த உறவினா்கள் அங்கு சென்று பாா்த்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது.
ஜன்னலை உடைத்து பாா்த்தபோது, சுரேஷ்குமாா் கட்டில் படுக்கையில் தனது தலையை கழுத்து பகுதி வரை பாலித்தீன் பையால் மூடியிருந்ததுடன், கழுத்தில் கேபிள் வயரால் இறுக்கிய நிலையில் மயக்கமடைந்து கிடந்துள்ளாா். இதைப் பாா்த்த உறவினா்கள், சுரேஷ்குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சுரேஷ்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...