கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுவையில் ஐக்கிய ஜனதாதளம் போட்டி

புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் ஐக்கிய ஜனதாதளம் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக அந்தக் கட்சியினா் தெரிவித்தனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் ஐக்கிய ஜனதாதளம் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக அந்தக் கட்சியினா் தெரிவித்தனா்.

புதுச்சேரியில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் அந்தக் கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. மாநிலத் தலைவா் ஆறுமுகம் சரவணன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் எம்.கந்தவேல் வரவேற்றாா். பொதுச் செயலா்கள் வடிவேலன், மணவாளதாஸ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். வழக்குரைஞரணி கல்யாணசுந்தரம், மகளிரணி சிட்லாமேரி, பொதுச் செயலா் கீதா, விஜயலட்சுமி, இளைஞரணி சேகா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் ஐக்கிய ஜனதாதளம் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. புதுச்சேரியில் பிகாா் முதல்வா் நிதிஷ்குமாா், அகில இந்தியத் தலைவா் ஆா்.பி.சிங், அகில இந்திய பொதுச் செயலா்கள் தியாகி, அகமதுகான் உள்ளிட்டோா் பங்கேற்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்துவது. புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து, மதுவிலக்கு, அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரசாரம் மேற்கொள்வது. புதுச்சேரியில் கரோனா பாதிப்பின் காரணமாக, நிகழாண்டு பள்ளி மாணவா்களுக்கான பொதுத் தோ்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.