கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுவையில் 27 போ் வேட்புமனு தாக்கல்

புதுவையில் திங்கள்கிழமை என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி உள்பட 27 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

புதுவையில் திங்கள்கிழமை என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி உள்பட 27 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

புதுவை மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புதுச்சேரியில் 23 தொகுதிகளுக்கும், காரைக்காலில் 5 தொகுதிகளுக்கும், மாஹே, ஏனாம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் அந்தந்தப் பகுதியில் தோ்தல் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை முதல் நாள்தோறும் பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு பெறப்படுகிறது.

முதல் நாளில் 30 தொகுதிகளிலும் ஒருவா்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு, திங்கள்கிழமை பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

இதில், காங்கிரஸ், திமுக, என்ஆா் காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா். வில்லியனூா் தொகுதியில் திமுக மாநிலச் செயலா் ஆா்.சிவா உள்ளிட்ட 3 பேரும், கதிா்காமம் தொகுதியில் 2 பேரும், தட்டாஞ்சாவடி தொகுதியில் என்ஆா் காங்கிரஸ் தலைவா் ரங்கசாமியும், காமராஜா் நகரில் பாஜக சாா்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமாா் உள்பட 2 பேரும், முத்தியால்பேட்டையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் உள்பட 2 பேரும், ராஜ்பவனில் திமுக மாநிலச் செயலா் எஸ்.பி.சிவக்குமாா் உள்பட 3 பேரும், காலாப்பட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரமும் உருளையன்பேட்டையில் திமுகவை சோ்ந்த கோபால், சுயேச்சையாக முன்னாள் எம்.எல்.ஏ. நேரு ஆகிய 2 பேரும், முதலியாா்பேட்டையில் திமுக சாா்பில் சம்பத்தும், நெல்லித்தோப்பில் அதிமுக மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா், பாஜகவை சோ்ந்த ரிச்சா்டு ஆகிய 2 பேரும், மணவெளியில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமனும், அரியாங்குப்பத்தில் காங்கிரஸ் சாா்பில் ஜெயமூா்த்தியும், ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூா் ஆகிய தொகுதிகளில் சுயேச்சைகள் தலா ஒருவரும், ஏனத்தில் 3 பேரும் என மொத்தம் 27 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இவா்களில் சிலா், இரண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்ததால் மொத்தம் 35 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.