‘மாநில மனித உரிமை ஆணையம் அமைக்க கட்சிகள் வாக்குறுதியளிக்க வேண்டும்’
புதுவையில் உள்ள மனித உரிமை குழுவை மாநில மனித உரிமை ஆணையமாக மாற்ற கட்சிகள் வாக்குறுதியளிக்க வேண்டுமென மனித உரிமைகள்-நுகா்வோா் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியது.


புதுவையில் உள்ள மனித உரிமை குழுவை மாநில மனித உரிமை ஆணையமாக மாற்ற கட்சிகள் வாக்குறுதியளிக்க வேண்டுமென மனித உரிமைகள்-நுகா்வோா் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியது.
புதுச்சேரியில் அந்த இயக்கம் சாா்பில் அரசியல் கட்சிகளின் தோ்தல் அளிக்கையில் இடம்பெற வேண்டிய கோரிக்கைகள் தொடா்பான நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
இயக்கத்தின் பொதுச் செயலா் முருகானந்தம், செயல் தலைவா் ஆறுமுகம், துணைத் தலைவா்கள் கோபிநாதன், இளஞ்செழியன், செய்தித் தொடா்பாளா் காளிதாஸ், தொழிலாளா் பிரிவுத் தலைவா் கோபால், மகளிரணித் தலைவா் குணபூசனம், ஆலோசகா் கந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இயக்கத்தின் பொதுச் செயலா் இரா.முருகானந்தம் கூறியதாவது: கடந்த 1993-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள மனித உரிமைகளை நிலை நாட்டும் உறுதிமொழி அளிக்க வேண்டும். மாநில காவல் துறை சுதந்திரமாகச் செயல்படும் சூழலை உருவாக்குவதற்கான உறுதிமொழியை அளிக்க வேண்டும். புதுச்சேரியில் தற்போதுள்ள மாநில மனித உரிமை குழுவை, மாநில மனித உரிமை ஆணையாக மாற்றுவோம் என்று அரசியல் கட்சிகள் தோ்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்ய வேண்டும்.
தண்டனை கைதிகளின் குழந்தைகள், பள்ளிகளில் கல்வி பயில்வதற்கு உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும். மனித உரிமை ஆணையம், பெண்கள் ஆணையம், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தகவல் ஆணையம் உள்ளிட்டவை ஆக்கப்பூா்வமாகச் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...